Header Ads

அமெரிக்காவின் அணு குண்டு விமானம் கொரியா நோக்கி கிளம்பியது: தாக்குதலுக்கு ரம் அனுமதி



அமெரிக்காவின் B1 போர் விமானங்கள், வட கொரிய தீபகற்பத்தை நோக்கி சற்று முன்னர் விரைந்துள்ளது என அதிர்வு இணையம் றொயிட்டர் செய்திச் சேவை ஊடாக அறிகிறது. நேற்று இரவு வட கொரியா பலஸ்டிக் ஏவுகணை ஒன்றை செலுத்தி சோதனை நடத்தியுள்ளது. அந்த ஏவுகணை அமெரிக்காவை வரை செல்லக் கூடியது என்பதும். அது அணு குண்டை ஏந்திச் சென்று தாக்க வல்லது என்பதனையும் சற்று முன்னரே அமெரிக்க பெண்டகன் பாதுகாப்பு நிறுவனம் உணர்ந்துள்ளது என்கிறார்கள். இதுவரை காலமும் பல ஏவுகணைகளை வட கொரியா பரீட்ச்சித்து வந்தது. ஆனால் அவை வெற்றிபெறவில்லை என்பது ஒரு புறம் இருக்க.

வட கொரியாவில் உள்ள மலைப் பிரதேசம் ஒன்றை, அன் நாட்டு அதிபர் தெரிவு செய்து அங்கே ஏவுகணை தளத்தை அமைத்துள்ளதோடு. அங்கே பெரும் ராணுவத் தளத்தை அமைத்து தங்கியுள்ளார். மிக மிக பாதுகாப்பான அந்த மலைப் பிரதேசத்தில் பல சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. மலைக்கு கீழ் இவ்வாறு அமைக்கப்படுள்ள தளத்தில் , இருந்தே ஏவுகணைப் பரிசோதனைகளை  வட கொரிய அதிர்பர் நிகழ்த்தி வருகிறார்கள். இன் நிலையில் இது மிகவும் ஆபத்தான விடையம் என்றும். நாம் தாக்குதல் நடத்தாவிட்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும், அமெரிக்க பாதுகாப்பு நிறுவனம் டொனால் ரம்புக்கு எச்சரிக்கை விடுத்ததை அடுத்தே.

ஒரு வருடத்திற்குள் எப்ப வேண்டும் என்றாலும், வட கொரியாவை தாக்கலாம் என்ற ஆணையை அவர் பிறப்பித்துள்ளார். இதனை அடுத்து மேலதிக போர் விமானங்கள் வடகொரியாவை  நோக்கி பறந்துள்ளது என அறியப்படுகிறது.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.