Header Ads

இலங்கையில் போதைவஸ்துக்கு காரணம்! புலம்பெயர் தமிழர்கள்! இளஞ்செழியன் எடுத்த அதிரடி இது!!யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் புலம்பெயர் தமிழர்களுக்கு எச்சரிக்கையோடு சேர்ந்த தெளிவான தகவல்களை விடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. அதாவது வெளிநாட்டில் வாழும் நீங்கள் உங்கள் உறவுகளுக்காக பணத்தை அனுப்புகிறீர்கள் கேட்கும் பொருட்களை வாங்கி கொடுக்கின்றீர்கள். 


அவர்களும் நல்ல தூக்கம் நல்ல சாப்பாடு எந்த கஸ்ரமும் உணராதவர்களாய் வாழ்கின்றனர்... இவர்களின் எதிர்காலம் உங்களால்தான் அழிக்கப்படுகின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? வேலை தேடாமல் சோம்பேறிகளாக வாழ்வது உங்களுக்கு தெரியுமா? வீதியில் ரவுடிதனம் பண்றது உங்களுக்கு தெரியுமா ?? சிறுவயதில் போதைக்கு அடிமையாகுவது உங்களுக்கு தெரியுமா? இதெற்கெல்லாம் காரணம் நீங்கள் அனுப்பும் பணம்தான்..! 


அவர்கள் என்ன செய்கின்றனர் என்று உங்களால் கண்காணிக்க முடியுமா??? நம் சமுதாயம் சீர்கெடாமல் இருக்க வேண்டுமானால் வளர்ந்துவரும் இளைஞர் யுவதிகள்தான் வழி நடத்த வேண்டியவர்கள். அவர்களே சமுகத்தை சீர்கெடுத்தால் எப்படி? நாமும் ஒரு காரணமாக இருக்க கூடாது..! என புலம்பெயர் தமிழர்களுக்கு உறைக்கும்படி கேட்டிருக்கிறார். உண்மைதான் யாழ்ப்பாணம் முதல்மாதிரியில்லை . அவர்சொன்னது உண்மைதான்!அளவுக்கு அதிகமாக பணம் அனுப்பகூடாது என ஏனைய மாவட்டத்திலுள்ள அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2 comments:

 1. ஒருமுறை காட்டுக்குள் போகும் போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம்.

  எங்களை அழைத்த வனத்துறை அதிகாரி, "குரங்குகளுக்குமனிதர்கள் இப்படிப் பழங்கள் கொடுத்துப் பழக்குவது தவறானது"- என்றார்.

  ஆச்சர்யமாய் இருந்தது..விலங்குகளுக்கு உணவிடுவது நல்லதுதானே என்று கேட்டேன்..."சுற்றிப் பார்ப்பதற்காக வரும் மனிதர்கள் ஒரு பிரியத்தில்தான்குரங்குகளுக்கு உணவிடுகிறார்கள்.

  ஆனால் தினமும் இப்படியே இந்தக் குரங்குகளுக்கு உணவு கிடைத்து விடுவதால் இந்தக் குரங்குகள் கஷ்டப்பட்டு உணவு தேடுவது, மரங்களின் மேல் ஏறி பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாககைவிட்டுக் கொண்டிருக்கின்றன..

  இப்படியே போவதால் ஒரு நாள் முற்றிலும் அந்த பயிற்சி இல்லாமலேயே புதிய தலைமுறைக் குரங்குகள் மாறி விடுகின்றன...

  வரிசையில் உட்கார்ந்து பிச்சை எடுப்பது போல இந்தக் குரங்குகளும் டூரிஸ்ட்களிடம் பிச்சை எடுக்கும் ஜீவன்களாக மாறி விடுகின்றன...

  எனவே இயற்கையுடன் இணைந்து வாழும் மிருகங்களை அதன் போக்கில் வளர விடுவதே அவற்றுக்கு ஆரோக்கியமானது" என்று பதில் சொன்னார்...  நிறைய யோசிக்க வைத்தது...!

  -

இலவச அரிசி வாங்கி,
  -இலவச மிக்ஸியில் சட்னி அரைத்து,
  -இலவச கிரைண்டரில் இட்லிக்கு மாவாட்டி,
  -இலவச மின்விசிறியைப் போட்டு இளைப்பாறி,
  -இலவச டிவியில் படமும் சீரியல்களும் பார்க்கும் நம்மஊர் மக்களுக்கும், இது தான் நடக்கிறது!

  உழைக்கவே மனம் வருவதில்லை!

  "

மேட்டர்" என்னவோ குரங்கு பற்றித்தான்.

  ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.