Header Ads

ஒருவர் சேட் காலரை ஒருவர் பிடித்தால் .. இளஞ்செழியன் சுடப்பட்டதன் பின்னணி என்ன ?



யாழ்பாணத்தில் தற்போது நிலமை எல்லாம் மாறிவிட்டது. வீதியில் ஒருவர் உணவு இன்றி தவித்து பிச்சை எடுத்தால், அதனை எவரும் பார்பதோ இல்லை கண்டுகொள்வதோ இல்லை. ஆனால் அதே நபர் மற்றுமொரு நபரோடு சேட் கலரை பிடித்து சண்டையிட்டால் போதும். சினிமா படம் போல ஒரு கூட்டமே அங்கே கூடி வேடிக்கை பார்க்கும். இது தான் இன்றைய யாழ்ப்பாணம். மாணவிகளுக்கு ரவுடிகளை ரெம்ப பிடிக்கிறது. ஒரு மாணவன் தனக்கு பிடித்த மாணவியை காதலிக்க கூட, ஒரு ரவுடியாக மாறி பந்தா செய்யவேண்டி உள்ளது. அப்படி என்றால் தான் காதலி மடிகிறார் என்ற நிலை.

இது போக வீதி ஓரத்தில் ஏதாவது பிரச்சனை என்றால், கூட்டம் கூடுவது ஒரு பக்கம் இருக்க. அதற்கு பஞ்சாயத்து செய்ய என்று 2 கிளடுகள் வந்துவிடுவதும் வழக்கம். இதுபோல தான், சமீபத்தில் குடித்துவிட்டு தனது மச்சானோடு சின்ன தகறாறில் ஈடுபட்டவர் தான் இந்த ஜெயந்தன். மக்கள் கூட்டம் கூட முன்னரே அங்கே ஊர்வலமாக வந்த  இளஞ்செழியன் கார் வந்துவிட்டது. பிணக்கை தீர்ப்பது வேடிக்கை பார்ப்பது என்று அலையும் இதுபோன்ற கோஷ்டியினரே , இது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சுமத்தி வருகிறார்கள்.

அதன் பின்னர் என்ன நடந்தது என்று நாம் அறிவோம். இச் சம்பவம் தொடர்பாக நீதிபதி இளஞ்செழியன் கூறியுள்ள வாக்குமூலம், சுட்ட நபர் கூறிய வாக்கு மூலம். மற்றும் பொலிசார் தெரிவித்துள்ள கருத்து இவை அனைத்துமே ஒன்றுக்கு ஒன்று முரணாகவே உள்ளது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.