Header Ads

உயிரை துச்சமாக மதித்த எகிப்து இராணுவ வீரரின் துணிச்சல்!! அதிர்ச்சி வீடியோ

எகிப்தில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் இரு சிறுவர்கள் உள்பட 7 பேர் பலியாகினர். பதற்றம் நிறைந்த வட சினாய் பகுதியில் ராணுவ முகாமையொட்டிய சோதனைச் சாவடி அருகே செவ்வாய்க்கிழமை இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இது தொடர்பாக எகிப்து ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது: ராணுவ முகாமில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தும் நோக்கத்துடன் சக்தி வாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி ஓட்டி வந்தார். 


அப்போது சோதனைச் சாவடியில் இருந்த வீரர் அந்தக் கார் வேகமாக வருவதைக் கண்டதும் அங்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பீரங்கியை ஓட்டி வந்து அந்தக் காரின் வழியை மறித்தார். பின்னர் அந்த காரின் மீது பீரங்கியை ஏற்றினார். பின் அங்கிருந்து சற்று தூரம் பீரங்கிய சென்ற நிலையில் கார் வெடித்தது. இந்த கார் குண்டு வெடிப்பில் இரு சிறுவர்கள், இரு பெண்கள் உள்பட 7 வழிப்போக்கர்கள் உயிரிழந்தனர். 


மேலும் அந்த காரை தடுத்து நிறுத்தியதன் காரணமாக ஏற்படாவிருந்த பல உயிரிழப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளன. ராணுவ முகாமுக்குப் பெரும் சேதம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் சுமார் 100 கிலோ எடை கொண்ட மிக சக்தி வாய்ந்த வெடிபொருள் அந்தக் காரில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது என எகிப்து ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இத் தாக்குதலுக்குப் பின்னால் எந்த பயங்கரவாதக் குழு செயல்பட்டது என்பது தெரியவில்லை. எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.