Header Ads

பீர் அடித்துக்கொண்டே நடக்கும் யோகா வகுப்பு!! நீங்களும் கலந்துகொள்ளலாம்

பல்வேறு அமைப்பினரின் கடும் எதிர்ப்பால் இந்தூரில் இன்று நடைபெற இருந்த பீர் யோகா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு தனியார் ஹோட்டல் பீர் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பீர் யோகா என்பது பீர் குடித்துக் கொண்டே யோகா செய்யும் உடற்பயிற்சி ஆகும். 


ஜெர்மனியில் முதன்முதலாக பீர் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டு அது உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் பீர் யோகா நிகழ்ச்சி அதிக வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தான் இந்தூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் பீர் யோகா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. Ads by Datawrkz ஆனால், அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் இந்நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, 


போலீஸில் புகார் செய்தனர். உடனே அந்த ஹோட்டல் நிர்வாகம், பீர் யோகா நிகழ்ச்சியை ரத்து செய்தது. மேலும், “இந்த நிகழ்ச்சி யாருடைய மனதையாவது புண் படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.