Header Ads

முல்லைத் தீவு கடலில் வெள்ளிக்கிழமை தோன்றி மறைந்த அதிவேக தாக்குதல் படகு யாருடையது ?



தமிழக கடலோர காவல் துறையினர் தமது ராடரில் அதிவேக படகு ஒன்று செல்வதை அவதானித்துள்ளார்கள். வெள்ளி அதிகாலை இந்த படகு, இலங்கை நோக்கிச் சென்றதும். அது முல்லைத்தீவு கடல் பகுதி நோக்கிச் சென்றதை அவதானித்த இந்திய படையினர் இதனை இலங்கை கடலோர காவல் படைக்கு அறிவித்துள்ளார்கள் என இந்திய ராணுவச் செய்திகளை வெளியிடம் டெகல்கா தெரிவித்துள்ளது.

இதனை இலங்கை கடல் படையினரும் ஏற்கனவே அவதானித்துள்ளதாகவும். இது சாதாரன மீன்பிடி படகு அல்ல என்றும், பெயர் குறிப்பிட விரும்பாத சிங்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மிகவும் சக்த்திவாய்ந்த படகு ஒன்று இலங்கை கடல் எல்லை வரை வந்து மறைந்து விட்டது என்ற செய்தி இதுவரை எந்த ஒரு ஊடகங்களிலும் வெளியாக வில்லை.

முல்லைத்தீவு நோக்கி வந்த படகு மீண்டும் சென்றுவிட்டதா? இல்லை வட பகுதியில் இன்னும் மறைந்து இருக்கிறதா என்பது தெரியாதுள்ள நிலையில். இந்தியப் பெருங்கடலில் , சுமார் 110 மைல் தொலைவில் வைத்தே, இந்தியப் படையினர் இதனை அவதானித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். சிவனொளி பாதமலையில் உள்ள பாதச் சுவடியை , சைவ சமய மக்கள், சிவன் பாதம் என்பார்கள். சிங்களவர்கள் புத்தரின் பாதம் என்கிறார்கள். அது போல , வந்த படகு சீனர்களது படகா என்று இந்தியா கிலி கொள்ள. இது புலிகளின் படகு என்று இலங்கை கிலி கொண்டுள்ளது என்கிறார்கள் விடையம் அறிந்த வட்டாரத்தினர். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.