Header Ads

3ஆம் மாடியில் இருந்து மகளை வீசி கொலை செய்த கொடூர தாய்! எங்கே நடந்தது தெரியுமா ?

பெங்களூருவில் 3ஆவது மாடியிலிருந்து சிறுமியை வீசி கொன்ற தாயை இந்திய காவவ்துறையினர் கைது செய்தனர். பெங்களூருவில் வசிக்கும் பெண் ஒருவர் தனது 9 வயது பெண் சிறுமியை, அவர் வசிக்கும் குடியிருப்பின் 3ஆவது மாடியிலிருந்து இரண்டு முறை வீசி கொன்றார். இதனையறிந்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். 


அதில், அவரது மகள் மனநலம் பாதிக்கப்பட்டு மிக சிரமப்பட்டு வந்தது. இதனால் மனம் வெறுத்து குழந்தையை கொன்றதாக அவரது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். அவரும் தற்கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தசம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.