Header Ads

அமெ­ரிக்க நிபுணர் எச்­ச­ரிக்கை.! மக்களே உஷார்!!

மருத்­து­வ­ம­னை­களில் நோயா­ளி­க­ளுக்கு மருந்­து­களை கண்­கா­ணித்து உட்­செ­லுத்­து­வ­தற்கு உயர் தொழில்­நுட்ப கணினி உப­க­ர­ணங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்ற நிலையில், கணி­னி­களை ஊடு­ரு­ப­வர்கள் அந்த மருத்­துவ கணினிகளை ஊடு­ருவி படு­கொ­லை­களை மேற்­கொள்ள வாய்ப்­புள்­ள­தாக அமெ­ரிக்க நிபுணர் ஒருவர் எச்­ச­ரித்­துள்ளார். 


மேற்­படி கணி­னி­களை ஊடு­ரு­ப­வர்கள் மருத்­து­வ­மனை கண­ினி­களை ஊடு­ருவி அதனை தமக்கு ஏற்­ற­வாறு கட்­டுப்­ப­டுத்தி மருந்து விநி­யோக அளவை பல மடங்கு அதி­க­ரித்து நோய­ளியைக் கொல்­வ­தற்கு சாத்­தி­ய­முள்­ள­தாக அமெ­ரிக்க வைட்ஸ்கோப் பாது­காப்பு அமைப்பின் சைபர் தாக்­குதல் பாது­காப்பு நிபு­ண­ரான பில்லி றியொஸ் தெரி­வித்தார். 


லாஸ் வெகாஸில் இடம்­பெற்ற பிளக் ஹட் சைபர் பாது­காப்பு கூட்­டத்தில் கலந்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். கணி­னி­களை ஊடு­ரு­ப­வர்கள் பொது மருத்­து­வ­மனை கண­ினி­களை ஊடு­ருவி அவற்றின் நிகழ்ச்சித் திட்டங்களை தமக்­கேற்­ற­வாறு மாற்­றி­ய­மைத்து நோயா­ளிக்கு முறை­கே­டான வகையில் மருந்­து­களை விநி யோ­கிக்க கணி­னிக்கு உத்­த­ர­விட்டு அவரை படு­கொலை செய்யும் அபா­ய­முள்­ள­ தாக அவர் கூறினார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.