Header Ads

கள்வனின் கையைக் கொத்திய கிளி" டி.என்.ஏ வைத்து பொலிசார் கள்வனை பிடித்த கதை இது !



வீட்டிற்குள் புகுந்து களவெடுக்கும்(பேர்கிளர்ஸ்) பொலிசார் மிகவும் ஆபத்தானவர்கள் என்று கூறுவது வளக்கம். ஏன் எனில் இவர்கள் பொதுவாக வீட்டில் உள்ளவர்கள் உறங்கிய பின்னரே உள்ளே புகுந்து ஓசை படாமல் பொருட்களை களவாடிச் செல்வார்கள். அதுபோக வீட்டில் உள்ளவர்கள் விழித்துகொண்டால், அவர்களை தாக்கவும் இவர்கள் தயங்க மாட்டார்கள்.

பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் உள்ள வீடு ஒன்றை, ஓசைபடாமல் உடைத்து. லித்துவேனிய நாட்டவர் ஒருவர் களவாடச் சென்றுள்ளார். இவர் சற்றும் எதிர்பாரத ஒன்று அங்கே இடம்பெற்றுள்ளது. அது என்னவென்றால் அங்கே இருந்த கிளி கத்த ஆரம்பித்துவிட்டது. இதனை அடக்க என அவர் கிளியை பிடித்து திருக முயன்றவேளை கிளி அவர் கைகளை கொத்தி பெரும் காயத்தை உண்டாக்கியுள்ளது. சற்றும் எதிர்பாரமல் நடந்த இந்த விடையத்தால் திணறிப்போன கள்ளவன் தப்பி ஓடிவிட்டான்.

கைகளில் ஏற்பட்ட வலியால் அவன் துடித்துப் போனான். ஆனால் மேட்டார் இத்தோடு நிற்க்கவில்லை. காலையில் அங்கே வந்த பொலிசார் வீட்டில் ஏதாவது தடையம் உள்ளதா என்று சல்லடை போட்டு தேடியவேளை. கிளியின்  சொண்டில்(அலகு) ரத்தம் இருப்பதை அறிந்து அதனை கவனமாக எடுத்து டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளார்கள். உடனே டி.என்.ஏ சாம்பிள் கிடைத்துவிட்டது. அதனை டேட்டா பேசில் தேடிப் பார்த்தால். ஏற்கனவே ஒரு குற்றச்செயலுக்காக , குறித்த கள்வனின் ரத்த மாதிரியை பொலிசார் எடுத்து டேட்டா பேசில் போட்டு வைத்திருந்தார்கள்.

இதுவும் அதுவும் ஒத்துப்போகவே, உடனே குறித்த லித்துவேனிய நாட்டு காரரை பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். கிளியிடம் சிக்கி சின்னாபின்னமாகவேண்டும் என்று இவன் தலையில் எழுதி இருக்கு யாரால் மாற்ற முடியும். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.