Header Ads

வீட்டிற்குள் வெள்ளம் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் ? இந்த நபர் மீன் பிடிப்பதைப் பாருங்கள்!!

புயல் காரணமாக வீட்டிற்குள் புகுந்த நீரில் ஒரு நபர் மீன் பிடித்து விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஹார்வே என்ற புயல் சமீபத்தில் அமெரிக்காவை தாக்கியது. அதனால், டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன், விக்டோரியா உள்ளிட்ட சில நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. 


பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்தது. இதனால், பல வீடுகளில் மழை நீர் புகுந்தது. அந்நிலையில், ஹூஸ்டன் பகுதியில் விவியான சால்டன என்பவர் வசிக்கும் வீட்டினுள் வெள்ளம் புகுந்தது. வெள்ள நீரோடு சில மீன்களும் வீட்டிற்குள் புகுந்துவிட்டன. 


அந்த மீன்களை விவியானாவின் தந்தை பிடித்து தனது மகளுடன் விளையாடினார். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இவ்வளவு துயரமான சூழ்நிலையில், மீன் பிடித்து விளையாண்ட விவியானாவின் குடும்பத்தினரை பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.