Header Ads

வடகொரிய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!! கடும் அச்சத்தில் அயல் நாடுகள்

பசுபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் மேலும் அதிகமான ஏவுகணை சோதனைகளை நடத்துமாறு வடகொரிய இராணுவத்திற்கு அந்த நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் பணிப்புரை விடுத்துள்ளார். அந்த நாட்டு அரச ஊடகங்களை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது. அமெரிக்கா, தென் கொரியா, ஐப்பான் உள்ளிட்ட நாடுகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பொருளாதார தடையும் விதித்தன. எனினும் அதை பொருட்படுத்தாத வடகொரியா, தொடர்ந்து கண்டம் விட்டு, கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. 


அண்மையிலும் ஜப்பானுக்கு மேலாக ஏவுகணை சோதனை ஒன்றை வடகொரியா மேற்கொண்டிருந்தது. இந்த நிலையில், ஜப்பான், தென்கொரியா, ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா என யாருக்கும் அஞ்சாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்த வேண்டும் என வடகொரிய இராணுவ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி கிம் ஜாங் உன் பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.