Header Ads

புலம்பெயர்ந்து கனடா சென்ற தம்பதிகள் யாழ்ப்பாணத்துக்கு வந்து செய்த லீலைகள்




இலங்கையில் இருக்கும்போது சுமார் 51 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டதாக கனடாவில் காப்புறுதி பெறுவதற்காக வரணிப் பகுதியைச் சேர்ந்த கனடா நாட்டவர்கள் கொள்ளை நாடகமொன்றை முன்னெடுத்துள்ளதாக கொடிகாமம் காவல்துறையினர்  அதிர்வு புலனாய்வு நிருபருக்கு தெரிவித்துள்ளனர்.

கடந்த 7 ஆம் நாள் திங்கட்கிழமை வரணி பகுதியில் உள்ள வீடொன்றில் இரவு 8 மணியளவில் நுழைந்த திருடர்கள் சுமார் 51 லட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றதாக கனடா நாட்டில் இருந்து வந்திருந்த தம்பதிகளால் கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இதனை தொடர்ந்து தம்பதிகள், பொலிசாரின் அறிக்கையை பெற பெரும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளதோடு. அது இல்லையென்றால், கனடாவில் இன்சூரன்ஸ் கிளேம் போட முடியாது என்றும் கூறியுள்ளார்கள்.

இதனால் சந்தேகமடைந்த பொலிசார், 7 பேரை இது தொடர்பாக விசாரித்தார்கள். இன் நிலையில் பணத்தை கொடுத்தாவது, பொலிசாரின் ரிப்போட்டை எடுத்துக்கொண்டு கனடா செல்லவேண்டும் என்று. குறித்த தம்பதியினர் ஒருவருக்கு லஞ்சம் கொடுக்கவும் முற்பட்டுள்ளார்கள். இதனூடாக இவர்கள் பெரும் நாடகமாடியுள்ளமையும். நகைகள் எதுவும் களவாடப்படவில்லை என்பதனையும்  பொலிசார் கண்டுபிடித்துள்ளதாக அதிர்வின் புலனாய்வு நிருபர் சற்று முன் அறிவித்தார். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.