Header Ads

தனது தாயை கொலைசெய்து இதயத்தை சாப்பிட்ட கொடூர மகன்! அதிரும் தகவல்கள்

தனது தாயை கொலை செய்து அவரது இதயத்தை சாப்பிட்ட கொடூர மகன் தொடர்பான அதிர்ச்சி செய்தியை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்தியாவின் மகாராஷ்டிரா பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 65 வயதுடைய தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் 27 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தையே இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். 


குறித்த நபரின் மனைவி தனது பிள்ளைகளுடன் அவரது தாய் வீட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிக மதுபோதையில் இருந்த நபர் அருகிலுள்ள வீட்டில் சென்று உணவு கேட்டுள்ளார். அதன்போது தம்மிடம் உணவு இல்லையென அந்த வீட்டார் தெரிவித்ததையடுத்து, கோபத்துடன் தனது வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் கத்தியொன்றை எடுத்து, தனது தாயை கொடூரமாக கொலை செய்துள்ளார். 


அதனையடுத்து இரக்கமில்லாத மகன், தனது தாயின் இதயத்தை வெளியில் எடுத்து தட்டொன்றில் வைத்துள்ளார். பின்னர், சட்னி மற்றும் மிளகாய்தூள் சேர்த்து அந்த இதயத்தை சாப்பிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரான மகன் கைதுசெய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளை மகாராஷ்டிரா காவல்துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.