Header Ads

பிளாஸ்டிக் பைக­ளுக்குத் தடை : மீறினால் தண்டப்பணம் எவ்வளவு தெரியுமா ? இன்றிலிருந்து அமுலாகிறது

கென்­யாவில் பிளாஸ்டிக் பைக­ளுக்கு நேற்று திங்­கட்­கி­ழமை முதல் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.பொலித்தீன்  இதன் பிர­காரம் எவ­ரா­வது பிளாஸ்டிக் பைகளை விற்­பதோ அன்றி உற்­பத்தி செய்­வதோ கண்­டு­பி­டிக்­கப்­பட்டால் அவர் 38,000 அமெ­ரிக்க டொல­ருக்கும் அதி­க­மான தண்டப் பண விதிப்பை அல்­லது 4 வரு­டங்­க­ளுக்கு மேற்­பட்ட சிறைத்­தண்­ட­னையை எதிர்­கொள்ள நேரிடும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 


சுற்­றுச்­சூழல் மாச­டை­வதைத் தடுக்­கவே பிளாஸ்டிக் பைக­ளுக்குத் தடை விதித்­துள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்கம் கூறு­கின்ற அதே­ச­மயம், அந்தப் பைகளை உற்­பத்தி செய்­ப­வர்கள் மேற்­படி தடையால் 80,000 வேலை வாய்ப்­புகள் வரை இழக்­கப்­ப­டலாம் என வாதிட்டு வந்­தனர். இந்தத் தடைக்கு எதி­ராக நீதி­மன்­றத்தின் மூலம் முன்­னெ­டுக்­கப்­பட்ட சவால்கள் கார­ண­மாக அந்தத் தடையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது பல வருட கால தாம­தத்தை எதிர்­கொண்­டது. இந்­நி­லையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இந்தத் தடை தொடர்­பான மேன்­மு­றை­யீட்டை விசா­ரித்த அந்­நாட்டு நீதி­மன்றம் மேற்­படி தடைக்கு ஆத­ர­வாக தீர்ப்­ப­ளித்­துள்­ளது.


இது பிளாஸ்டிக் பைக­ளுக்கு தடை விதிக்கும் முக­மாக கடந்த 10 வருட காலப் பகு­தியில் மேற்­கொள்­ளப்­பட்ட மூன்­றா­வது முயற்­சி­யாகும். கென்ய மக்கள் ஒரு மாதத்துக்கு 24 மில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பைகளை உபயோகித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.