Header Ads

முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகள்! இப்படியெல்லாம் செய்யலாமா

மியன்மார் நாட்டில் ரொஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெற்றுவரும் நிலையில் அங்கிருந்து தப்பிச்செல் முயற்சித்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பங்களாதேஷின் எல்லைப் பாதுகாப்பு தரப்பினரை மேற்கோள் காட்டி சர்வதேக ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 


பங்களாதேஷின் எல்லை பிரதேசமான கும்தும் பகுதியில் வைத்து மியன்மார் பாதுகாப்பு தரப்பினரால் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தப்பிச்செல்ல முயற்சித்த ரொஹிங்கிய முஸ்லிம்கள் ஒரு தொகுதியினரை சுற்றிவளைத்து, மெஷின் கன் துப்பாக்கிகள் மற்றும் மோட்டார் ஷெல் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக பங்களாதேஷிய பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். 


தாக்குதல் நடத்தப்பட்ட கூட்டத்தில் பெருமளவில் பெண்கள் மற்றும் சிறுவர்களே இருந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமையில் மியன்மார் இராணுவத்தினருக்கும் ரொஹிங்கிய முஸ்லிம் ஆயுத தரப்புக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில், 12 இராணுவத்திரும் 80 க்கும் அதிகமான ரொஹிங்கிய முஸ்லிம் பொதுமக்களும் மரணித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.