தென் கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் இவ்வளவு வீழ்ச்சியா ? காரணம் வடகொரியா ?
தென் கொரியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவு அடைந்திருப்பதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தென் கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் சரிவு
சியோல்:
தென் கொரியாவில் இந்த ஆண்டு குழந்தைகள் பிறப்பு விகிதம் எப்போதும் இல்லாத அளவு வெகுவாக குறைந்து விட்டது.
கடந்த ஆண்டு 4 லட்சம் குழந்தைகள் பிறந்தன. இந்த ஆண்டு இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகளே பிறந்துள்ளன.
இது தென் கொரியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகை பெருக்கம் குறைவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆனால் பெண்களின் குழந்தை பிறப்பு திறன் குறைவு, விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை மற்றும் கல்வி கட்டண உயர்வு போன்றவற்றால் பெரிய அளவிலான குடும்பத்தை நிர்வகிக்க முடியவில்லை. எனவே, குழந்தை பெறுவதை தம்பதிகள் நிறுத்திவிட்டனர்.
ஆனால் தென் கொரியா நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க கடந்த 10 ஆண்டுகளில் ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது.
புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு போனஸ், மகப்பேறு விடுமுறை அதிகரிப்பு, சம்பள உயர்வு மற்றும் மலட்டுத்தன்மையை நீக்க சிகிச்சைக்குரிய செலவுகள் போன்றவற்றை வழங்கி வருகிறது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்