Header Ads

எப்படி தப்பி ஓடினார் ஜெகத் ஜயசூரியா: டுபாய் சென்று ஓடியது எப்படி தெரியுமா ?



இலங்கைக்கான பிரேசில் நாட்டு தூதுவரும், முன் நாள் படைத்தளபதியுமான ஜெகத் ஜயசூரியா, எப்படி தப்பி ஓடினார் தெரியுமா ? பிரேசிலில் இருந்து அவசரமாக கிளம்பி டுபாய் சென்று. அங்கிருந்து ஸ்ரீலங்கன் ஏர் வேஸ் யூல்545 ஊடாக கொழும்பு சென்றுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ரணில் உடனே தொலைபேசி அமைப்பை மேற்கொண்டு சம்பந்தரோடு பேசியுள்ளார். புலம்பெயர் தமிழர்கள் இன்னும் அடங்கவில்லை என்று அவர் கடுமையாக சாடியுள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மிக நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள். சம்பந்தர் கையில் என்ன உள்ளது. புலம்பெயர் தமிழர்கள்  ஒரு முடிவெடுத்து விட்டால், அவர்களே நினைத்தாலும் மாற்ற மாட்டார்கள் என்பது தெரியாதா ?

இன் நிலையில் கருத்து வெளியிட்டுள்ள முன் நாள் ஆணையாளர் ஜஸ்மின் சூக்கா, ஜெகத் ஜெயசூரியா ஒரு கோளையைப் போல ஓடி ஒளிந்துள்ளார் என்று வர்ணித்துள்ளார். உண்மையில் குற்றமற்றவர் என்றால், அவர் பிரேசில் நாட்டில் இருந்து வழக்கை எதிர்கொண்டு இருக்கலாமே என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதேவேளை பிரேசில் நாட்டில் இருந்த மேலதிக இலங்கை தூதரக பணியாளர்களும் பெட்டிபடுக்கைகளோடு அப்பீட் ஆகியுள்ளார்கள். ஏன் எனில் இவர்களின் சில ராணுவ சிப்பாய்களும் அடங்குகிறார்கள். இவர்கள் மீது வழக்கு பாயலாம் என்ற பயம் தான்.

அட எல்லாம் இப்ப சுமூகமா தானே போகுது ? தமிழர்கள் நல்லாட்சி நடப்பதாக தானே நம்புகிறார்கள். என இவ்வளவு காலமும் நம்பி வந்த சிங்கள தலைவர்கல் பலர் நேற்று முதல் அதிர்சியில் உள்ளார்கள். இனி என்ன தமிழ் தலைவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தவேண்டி இருக்கும். சம்பந்தரோ, மாவையோ , இல்லை இந்த பின் வாசல் சுமந்திரனோ சொல்லி புலம்பெயர் தமிழர்கள் என்ன கேட்க்கப்போகிறார்களா ? நீதி கிடைக்கும் வரை புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் ஓயாது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.