Header Ads

பாலிவுட்டுக்காக லிப்-லாக், பிகினி, கடும் செக்ஸியாக பிரபல தென்னிந்திய நடிகை!!

பாலிவுட்டில் தீவிர கவனம் செலுத்தி வரும் தென்னிந்திய நடிகை ஒருவர் வாய்ப்புக்காக லிப்-லாக், பிகினிக்கு என மாறியிருக்கிறாராம். ஒல்லி நடிகரின் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஐரின் நடிகைக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் அமையாததால், அவ்வப்போது தமிழில் தலைக்காட்டி வந்தார்.


தெலுங்கில் பிசியாக நடித்து வந்த போதிலும் அங்கும் வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால், பாலிவுட்டுக்கு சென்றார். சமீபத்தில் கவர்ச்சி குறித்து பேசி சர்ச்சையிலும் சிக்கியிருந்தார். பாலிவுட்டில் தற்போது சீரான அளவில் படங்கள் வருவதால் அங்கு மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள விரும்பும் நாயகி, அவரது பாலிசிகள் சிலவற்றை மாற்றியிருக்கிறாராம். 


நாயகி தற்போது இரண்டு என முடியும் ரீமேக் படம் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அந்த டிரைலரில் நாயகி படுகவர்ச்சியாக பிகினியிலும், லிப்-லாக் காட்சியிலும் நடித்து அனைவரையும் வாய்பிளக்க வைத்திருக்கிறாராம். அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறதாம். 


பாலிவுட்டை பொறுத்தவரை நடிகைகள் அவர்களது பிகினி புகைப்படங்களை வெளியிட்டு, சர்ச்சைகளில் சிக்கி வருவதை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் இந்த நாயகி படத்திலேயே கவர்ச்சி காட்டியிருப்பது தென்னிந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். எனினும் பாலிவுட்டிலாவது நீடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று விமர்சிக்கவும் செய்கிறார்களாம்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.