Header Ads

ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பரிசோதனை வெற்றி! இனிமேல் வடகொரியா வாழை சுருட்டவேண்டியதுதான்!!

எதிரி நாடுகளில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் ‘தாட்’ எனும் அமைப்பை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் அமைப்பை வெற்றிகரமாக பரிசோதித்தது அமெரிக்கா வாஷிங்டன்: எதிரி நாடுகளில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் ‘தாட்’ எனும் அமைப்பை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. 


அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக வடகொரியா தொடர்ந்து பல்வேறு ஏவுகணைகளை தொடர்ந்து சோதித்து வருகிறது. சமீபத்தில், அமெரிக்கா முழுவதும் அழிக்கும் சக்தி இருப்பதாக வடகொரியா தெரிவித்திருந்தது. இதனால், ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் பரிசோதனைகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 


அதன்படி, ’தாட்’ எனும் பெயர் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை துல்லியமாக குறிவைத்து இடைமறித்து தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட அமைப்பை உருவாக்கி பரிசோதித்துள்ளது. சோதனையில் பசிபிக் கடல் மீது பறந்து கொண்டிருந்த அமெரிக்கா வான் படையின் சி-17 விமானத்திலிருந்து செலுத்தப்பட்ட ஏவுகணையை அலாஸ்காவிலிருந்து ஏவப்பட்ட ‘தாட்’ இடைமறிப்பு ஏவுகணை தடம் பற்றி அறிந்து தாக்கி அழித்தது என்று அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு முகமை தெரிவித்தது. வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் தொடர்ந்து ராணுவ ரீதியிலான பதற்றம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. முதலில் ஒழுங்கா தமிழ் .எழுதுங்க..

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.