Header Ads

19% சிறுவர்கள் எதற்காக இன்டர்நெட் பாவிக்கிறார்கள் தெரியுமா ? அதுவும் எதனை பார்க்கத் தெரியுமா ?

இலங்கையினுள் 10 தொடக்கம் 17 வயதிற்கு இடைப்பட்ட பிள்ளைகளில் 19 சதவீதமானோர் இணையத்தளங்களில் ஆபாச படங்களை பார்ப்பதாக தற்போது தெரியவந்துள்ளது. 


தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையத்தளத்தில் இருந்து பாதுகாப்பு தொடர்பான மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் அதிகரிகளுக்கு தொளிவூட்டும் நிகழ்வு, காலி - மாலாவே பிரதேசத்தில் இடம்பெற்றது.


இதன்போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பொறுப்பான விசாரணை அதிகாரி சம்பி கே அயகம இதனை வெளிப்படுத்தியிருந்தார். இதேவேளை, குருநாகல், 


கண்டி, இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இணையத்தள துஷ்பிரயோகம் அதிகமாக இடம்பெறும் வலயமாக இனங்காணப்பட்டுள்ளதாக அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளர்.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.