Header Ads

5 ஆண்டு சிறைத்தண்டனை ! முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவுக்கு நடந்தது என்ன?

தாய்லாந்து நாட்டில் அரிசி மானியத் திட்டத்தை செயல்படுத்துவதில் அலட்சியமாக செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவுக்கு, 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

தாய்லாந்தில் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை பாங்காக்: தாய்லாந்து நாட்டில் கடந்த 2011ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் யிங்லக் ஷினவத்ரா வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார். அப்போது, 

அரிசி மானியத் திட்டத்தை தொடங்கினார். இந்த திட்டம் விவசாயிகளிடையே மிகவும் பிரபலம் ஆனது. ஆனால், இதற்காக அரிசி கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ஊழல் விவகாரங்கள் தொடர்பாக பிரதமருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. 2014ம் ஆண்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. 

அவர் பதவியில் இருந்து இறக்கப்பட்டதுடன், அவர் மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. இதில், அரிசி மானியத் திட்டத்தில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கும் ஒன்று. இந்த திட்டத்தினால் அரசுக்கு பல பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

இவ்வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைக்க தேவையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என தெரிகிறது. 

இவ்வழக்கில் கடும் தண்டனை கிடைக்கலாம் என்ற அச்சம் காரணமாக அவர் நாட்டை விட்டு சென்றுவிட்டதாக அவரது உதவியாளர்கள் கூறுகின்றனர். அவர் துபாயில் உள்ள சகோதரர் தக்சின் ஷினவத்ரா வீட்டிற்கு சென்றிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.