Header Ads

அமெரிக்க விமானங்கள் குருவியை போல் சுட்டு வீழ்த்தப்படும்.வட கொரியா எச்சரிக்கை

வடகொரியா மீது அமெரிக்கா போர்ப் பிரகடனத்தைச் செய்திருப்பதாக அன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ரி யோங்க் கோ தெரிவித்துள்ளார். வடகொரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் நேற்று தனது ட்விட்டரில் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

ஐ.நாவிலும் சர்வதேசத்திலும் வட கொரிய வெளியுறவு அமைச்சர் வட கொரிய அதிபரின் குரலை பிரதிபலிப்பாரானால் அவர்கள் அதிக காலம் நீடித்திருக்க மாட்டார்கள் என ட்ரம் தனது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். 


டொனால்ட் ட்ரம்பின் இச்செய்தி வட கொரியா மீதான அமெரிக்காவின் போர்ப் பிரகடனம் என தெரிவித்திருக்கும் ரி யோங்க் கோ, தம்மை அச்சுறுத்தும் நோக்கில் மீண்டும் அமெரிக்க போர் விமானங்கள் தமது எல்லையில் பறக்குமானால் அவை சுட்டு வீழ்த்தப்படும் என எச்சரித்துள்ளார். அமெரிக்க விமானங்கள் தமது வான் பரப்பிற்குள் பறக்காது, 

அண்மித்த சர்வதேச வன்பரப்பில் வட்டமிட்டாலும் அவை சுட்டப்படும் என அவர் சுட்டிக் காட்டி உள்ளார். அமெரிக்காவும் வட கொரியாவும் தமக்கிடையேயான அச்சுறுத்தும் வார்த்தைப் பிரயோகங்களினதும் எச்சரிகைகளினதும் உச்சத்தை இதன் மூலம் எட்டியுள்ளன. 

வடகொரியாவின் கிழக்குக் கரையோர சர்வதேச வான் பரப்பில் அமெரிக்க படை பலத்தை வெளிக்காட்டும் வகையில் அதன் போர் விமானங்கள் இரு நாட்களுக்கு முன்னர் பறந்தன. கடந்த புதன் கிழமை, டொனால்ட் ட்ரம் தனது ஐக்கிய நாடுகள் சபை உரையில், அமெரிக்காவோ அல்லது அதன் நேச நாடுகளோ தம்மை பாதுகாக்கும் நிலைக்கு வட கொரியாவால் தள்ள்ளப்படுவார்கள் ஆயின், வட கொரியா முற்றாக அழிக்கப்படும் என கூறியதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான பதட்டம் அதிகரித்து வருகிறது. 
ட்ரம்பின் இந்த ஐ.நா உரைக்கான அதிகாரபூர்வ பதிலை வடகொரிய வெளியுறவு அமைச்சர் ரி யோங்க் கோ வெளியிட்டிருந்தார். ட்ரம்பின் உரை நாய் குரைப்பது போல உள்ளது என அவர் செய்தி நிருபர்களுக்கு தெரிவித்தமை குறிப்பிடத் தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.