இனி வசூலுக்கு குறைவில்லை! கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை திரைப்படமாகிறது
இந்திய கிரிக்கெட் அணி முதல் உலககோப்பையை வெல்ல காரணமான அன்றைய கேப்டன் கபில்தேவ் வாழ்க்கை திரைப்படமாகிறது.
கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை திரைப்படமாகிறது
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் வாழ்க்கை இந்தியில் படமாகி வருகிறது.
ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் தெண்டுல்கர், டோனி, விளையாட்டு வீராங்கனை மேரிகோம் ஆகியோருடைய வாழ்க்கை படமாகி இருக்கிறது.
அடுத்து இந்திய கிரிக்கெட் அணி 1983-ல் முதல் உலககோப்பையை வெல்ல காரணமான அன்றைய கேப்டன் கபில்தேவ் வாழ்க்கை திரைப்படமாகிறது.
இயக்குனர் கபீர்கான் இந்த படத்தை இயக்க இருக்கிறார். இதில் நடிக்க இந்தி நடிகர் ரன்வீர்சிங் ஒப்பந்தமாகி இருக்கிறார். கபில்தேவ் படத்தை, பேன்தோம் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்