Header Ads

இலங்கை அணி வீரர்கள் மீது ஊக்கமருந்து குற்றச்சாட்டா! அதிர்ச்சியில் வீரர்கள்.

இலங்கை அணி வீரர்களிடம் ஐசிசி ஊழல் தடுப்புக்குழுவினர் விசாரணை நடத்தவுள்ளனர். சமீபத்தில் இலங்கை அணியின் முன்னாள் வீரரும், தேர்வுக்குழு உறுப்பினரான பிரமோத்யா விக்ரமசிங்கே அணி தேர்வு குறித்து கண்டனம் தெரிவித்தார். இது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், 


அவர் கூறிய குற்றங்கள் அனைத்தும் ஆதாரமற்றவை எனவும் தினேஷ் சந்திமால், உபுல் தரங்க உட்பட இலங்கை அணி வீரர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை மனு ஒன்றை அனுப்பினர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்புக்குழுவினர் இலங்கை வீரர்களிடம் விசாரணை நடத்தவுள்ளனர். 

இதுதொடர்பாக ஐசிசி மேனேஜர் அலெக்ஸ் மார்சல் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிரிக்கெட்டின் மீதான நம்பகத்தன்மையை நிலைநிறுத்தும் நடவடிக்கையில் ஐசிசி ஊழல் தடுப்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், மேலதிக தகவல்களை தெரிவிக்கமுடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதற்கிடையே தான் எந்த வீரர் மீது குற்றம் சுமத்தவில்லை என்றும், அணியின் தெரிவு மட்டும் பற்றியே கருத்து தெரிவித்ததாகவும் பிரமோத்யா விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.