Header Ads

மசூதி அருகே மனித குண்டு தாக்குதல்! மீண்டும் தீவிரவாதிகளா?

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் உள்ள ஒரு மசூதியின் அருகே இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். காபுல்: மசூதி அருகே மனித குண்டு தாக்குதல் - 5 பேர் பலி காபுல்: காபுல் நகரின் மையப்பகுதியான கலா-இ-பத்துல்லா என்ற இடத்தில் ஷியா பிரிவினரின் மசூதி உள்ளது. 

இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அங்கு ஜும்மா தொழுகைக்காக ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். பிற்பகல் சுமார் 2 மணியளவில் மசூதியின் அருகே ஆட்டு மந்தையை ஓட்டிவந்த ஒரு மர்மநபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை திடீரென வெடிக்கச் செய்தான். 

இந்த தாக்குதலில் ஐந்து பேர் உடல் சிதறி, பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 20 பேர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாகவும், 

இன்றைய தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. காயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் பிரதமர் அஷ்ரப் கானி, இதுபோன்ற தாக்குதல்களால் ஆப்கானிஸ்தான் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்துவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.