Header Ads

இலங்கையில் அகதிகளை தாக்க முயன்ற புத்தமத துறவிகள்! காரணம் இவைதான்.

இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ள மியான்மர் அகதிகளை தாக்க முயன்ற புத்தமத துறவிகளை தடுத்த அதிகாரிகள், அகதிகளை பாதுகாப்பான வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ள மியான்மர் அகதிகளை தாக்க முயன்ற புத்தமத துறவிகள் கொழும்பு: மியான்மர் நாட்டில் சிறுபான்மையினரான ரோஹிங்கியா முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருகிறது. 

அதனால் அவர்கள் அங்கிருந்து தப்பி, பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு, இலங்கைக்கு செல்லும் வழியில் கடலில் படகில் தத்தளித்த 31 ரோஹிங்கியா முஸ்லிம்களை இலங்கை கடற்படை காப்பாற்றியது. கொழும்பு அருகே உள்ள ஐ.நா. பாதுகாப்பு இல்லத்தில் 31 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், இலங்கை புத்தமத துறவிகள் தலைமையில் ஒரு கும்பல், நேற்று அந்த இல்லத்துக்குள் அத்துமீறி நுழைந்தது. ‘மியான்மரில் புத்தமத துறவிகளை கொன்ற பயங்கரவாதிகள் இவர்கள்தான்’ என்று கூறி, ரோஹிங்கியா முஸ்லிம்களை தாக்க முயன்றது. கல்வீச்சிலும் ஈடுபட்டது. அங்கிருந்த அதிகாரிகள், அந்த கும்பலை வெளியே தள்ளி கதவை பூட்டினர். அகதிகளை பாதுகாப்பான வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.