மாடி ஜன்னல் சட்டங்களுக்கிடையில் ஊசலாடிய பாலகன் : சீனாவில் பரபரப்புச் சம்பவம்
குடியிருப்புக் கட்டடமொன்றின் மூன்றாவது மாடியிலிருந்த தனது வீட்டில் பெற்றோரால் தனித்து விடப்பட்ட 3 வயது பாலகன் ஒருவன், மாடி ஜன்னல் சட்டங்களுக்கிடையில் உயிராபத்தான நிலையில் தொங்கிய பரபரப்புச் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சிசுவான் மாகாணத்திலுள்ள குவா ங்கன் நகரிலுள்ள குறிப்பிட்ட மாடி வீட்டிலிருந்து அந்தப் பாலகன் எக்கணமும் கீழே விழலாம் என்ற அபாய நிலையில் ஊசலாடிக் கொண்டிருப்பதை அவதானித்த அயலவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் துரிதமாக செயற்பட்ட அவர்கள் பாலகன் கீழே விழுந் தால் அவனை ஏந்திப் பிடிப்பதற்கு விரிப்பொன்றுடன் தயாராக இருந்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த சிறுவனது குடும்பத்தினர் அந்தக் கட்டடத்தின் கீழே மெத்தையொன்றை பிடித்திருந்து கீழே விழுந்த பாலகனை அந்த மெத்தையில் ஏந்தி காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவத்தில் அந்தப் பாலகன் எதுவித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளான்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்