Header Ads

டைனோசர் குட்டிகளை ஈனும் இராட்சத தவளை! விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு!

பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த முதலை இனம் ஒன்று டைனோசர்களை உணவாக உட்கொண்டமை தொடர்பில் சில தினங்களுக்கு முன்னர் விஞ்ஞானிகள் தகவல் ஒன்றினை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது மற்றுமொரு தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். 


அதாவது சுமார் 70 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்ததாக் கருதப்படும் தவளை இனம் ஒன்று டைனோசர்களை உணவாக உட்கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். குறித்த தவளை இனத்தினை Beelzebufo ampinga எனும் பெயர் கொண்டு விஞ்ஞானிகள் அழைத்துவருகின்றனர். 


இவை மடகஸ்கார் பகுதிகளிலேயே வசித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். எனினும் குறித்த தவளைகள் சிறிய வகை டைனோசர்களையே வேட்டையாடி உணவாக உட்கொண்டிருக்கலாம் எனவும் சிறிய டைனோசர்களை விழுக்கும் அளவிற்கு பெரிய தாடைகளை கொண்டிருந்திருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.