Header Ads

அதிகம் சம்பாதிக்கும் நடிகைகள் பட்டியலில் பிரியங்கா! முதலாவதாக இருக்குமோ ?

ஃபார்ப்ஸ் இதழ் வெளியிட்ட 2017ஆம் ஆண்டுக்கான அதிகம் சம்பாதிக்கும் தொலைக்காட்சி நடிகைகள் பட்டியலில் இந்தியாவின் பிரியங்கா சோப்ரா இடம் பிடித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு குவாண்டிகோ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்றார் பிரியங்கா. 


இதன் பின், இந்த ஆண்டு அதன் அடுத்த சீசனிலும் தோன்றிய அவர் பே வாட்ச் படத்தின் மூலம் பல கோடிகள் சம்பாதித்துள்ளார். கடந்த ஆண்டிலேயே அதிக சம்பளம் பெறும் தொலைக்காட்சி நடிகைகள் பட்டியலில் நுழைந்துவிட்ட பிரியங்கா, இந்த முறை எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த ஆண்டில் ரூ.65 கோடி மதிப்பிலான தொகையைச் சம்பளமாகப் பெற்றுள்ளார். 

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள கொலம்பிய மாடல் சோபியா வெர்கரா 271 கோடி வருமானம் பார்த்திருக்கிறார். அவர் கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்! இந்தப் பட்டியல் ஜூன் 1, 2016 முதல் ஜூன் 1, 2017 வரை தொலைக்காட்சி நடிகைகள் பெறும் சம்பளத்தை வைத்து அறிவிக்கப்படுகிறது

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.