டோன் ஷூட் மீ டார்லிங்: கிளி சொன்னதால் கொலை பற்றி அறிந்த பொலிசார் அதிர்ச்சி
தனது கணவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பெண்ணுக்கு கிளியின் ‘சாட்சியத்தின்’ பின் நடைபெற்ற வழக்கில் ஆயுள் தண்டனை கிடைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. அமெரிக்காவின் மெக்ஸிக்கன் மாநிலத்தைச் சேர்ந்த கிளெனா துராம் எனும் இப்பெண், மற்றும் அவரது கணவர் மார்ட்டின் துராம் ஆகியோர் ரத்தவெள்ளத்தில் கிடந்தார்கள். இவ்விருவரையும் யாரோ கொன்றுள்ளதாகவே முதலில் பொலிஸார் எண்ணினர். எனினும், ஒரு மணித்தியாலத்தின் பின்னர் கிளெனா துராம் உயிருடன் இருப்பதை பொலிஸார் உணர்ந்தனர்.
தனது முன்னாள் கணவருக்கும் தனது பிள்ளைகளுக்கும் கிளெனா எழுதிய தற்கொலை குறிப்பொன்றும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கிளெனா மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தனது கணவர் மார்ட்டினை தான் கொல்லவில்லை என பொலிஸாரிடம் கூறிய கிளெனா, தற்கொலை குறிப்புகளை எழுதியதாகவும் தனக்கு நினைவில்லை என்றார். காயத்தின் பின் வைத்தியசாலையில் விழித்தெழும்பும் வரை நடந்தவை எதுவும் தனது நினைவில் இல்லை என்றார். எனினும், மார்ட்டின் துராம் கொல்லப்பட்ட பின்னர் இவர்களின் வீட்டிலிருந்து கிளியொன்றை அவரின் முன்னாள் மனைவியான கிறிஸ்டினா கெல்லர் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றிருந்தார். தனது வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட கிளி, “சுட வேண்டாம்” என அடிக்கடி கூறிக்கொண்டிருந்ததைக் கேட்டு கிறிஸ்டினா வியப்படைந்தார். துராம் மார்ட்டினின் குரலின் சாயலில் இக்கிளி பேசியது.
டார்லிங் டோன் ஷூட் மீ என்று அது அடிக்கடி கூறியது. இச்சம்பவம் இடம்பெற முன்னர் கடைசியாக துராம பேசிய வார்த்தைகள் இவை தான். இதனை ஆதாரமாக வைத்தே பொலிசார் இந்த வழக்கை நகர்த்தினார்கள். கிளி அடிக்கடி கூறிவந்த வார்த்தைகளை வைத்து பொலிசார் நடத்திய விசாரணையில், தூரானையும் சுட்டுக் கொன்று, தானும் தற்கொலை செய்ய மனைவி முயன்றுள்ளமை தெரியவந்துள்ளது. இதில் கிளி நீதிபதிக்கு முன்னால் சாட்சியாக , இந்த வசனத்தை சொல்லிக் காட்டியுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கிளெனாவுக்கு தண்டனை வழங்கியுள்ளார்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்