Header Ads

யாழ் பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவனும் மாணவியும் SMS அனுப்பி விட்டு ஓட்டம்!!



யாழ் பிரபல பாடசாலைகளில் உயர்தரம் 2018ல் கல்வி பயிலும் மாணவனும் மாணவியும் தமது தாய் மற்றும் தந்தைக்கு தொலைபேசி மூலம் SMS அனுப்பிவிட்டு ஜோடியாக தலைமறைவாகியுள்னர்.

நேற்று மாலையிலிருந்து இவர்களைக் காணவில்லை என பெற்றோர் தேடித் திரிகின்றனர். இதே வேளை மாணவியின் தந்தையார் மாணவியின் நண்பி ஒருவரின் வீட்டுக்குச் சென்று கலவரத்தில் ஈடுபட்டதாகவும் மாணவியின் நண்பிக்கு இவர்கள் தலைமறைவாகப் போகும் விடயம் ஏற்கனவே தெரிந்திருந்தும் அந்தத் தகவலை தமக்கு சொல்லவில்லை என்ற கோபத்திலேயே தந்தையார் மாணவியின் நண்பியின் வீட்டுக்குச் சென்று கலவரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து மாணவியின் நண்பியின் உறவினர்கள் பொலிசாரின் உதவியை நாடிய போது பொலிசாரால் இரு தரப்பும் சமாதானப்படுத்தப்பட்டுள்ளார்கள். மாணவிக்கும் மாணவனுக்கும் 18 வயதாகிவிட்ட காரணத்தால் இது தொடர்பாக தாம் கவனம் செலுத்துவதாக பொலிசார் மாணவியின் தந்தைக்கு தெரிவித்துள்ளார்கள். மாணவியின் தந்தை பிரபல வர்த்தகர் எனத் தெரியவருகின்றது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.