Header Ads

40 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா இறக்குமதி செய்கிறது! காரணம் என்ன?

இந்திய அமெரிக்க நல்லுறவின் ஒரு பகுதியாக முதன்முறையாக அமெரிக்காவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட உள்ளது. 40 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது இந்தியா புதுடெல்லி: இந்திய அமெரிக்க நல்லுறவின் ஒரு பகுதியாக முதன்முறையாக அமெரிக்காவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது இந்தியா, 

முதல்கட்டமாக வரும் திங்களன்று 2 மில்லியன் பீப்பாய்கள் கொண்ட எண்ணெய் கப்பல்கள் இந்தியா வருகிறது. இந்தியா-அமெரிக்கா இடையே எண்ணெய் ஏற்றுமதி செய்ய கடந்த 40 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி, அமெரிக்கா சென்று அப்போதைய அதிபராக இருந்த ஒபாமாவை சந்தித்தார். 

இதையடுத்து எண்ணெய் ஏற்றுமதிக்கான தடை விலக்கி கொள்ளப்பட்டது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி தற்போதைய அதிபரான டெனால்ட் டிரம்ப்பை சந்தித்து எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டார். இதில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யவதற்கான ஒப்பந்தம் உறுதியானது. 

இதன் முதற்கட்டமாக 2 மில்லியன் பீப்பாய்கள் கொண்ட அமெரி்க்காவின் கச்சா எண்ணெய் கப்பல், டெக்சாஸ் நகரில் இருந்து கிளம்பியது. இந்த கப்பல் வரும் திங்களன்று ஒடிசாவின் பராதீப் துறைமுகம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.