Header Ads

தீவிரவாதிகள் ஊடுருவலை முறியடித்தது ராணுவம்! அமைத்தது யார்?

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அர்னியா பகுதியின் எல்லையில் தீவிரவாதிகள் உருவாக்கிய சுரங்கப்பாதையை இந்திய ராணுவம் கண்டுபிடித்ததால், தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு: தீவிரவாதிகள் ஊடுருவலை முறியடித்தது ராணுவம் ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அர்னியா பகுதியில் டமலா நுலா என்ற அடர்ந்த வனப்பகுதி உள்ளது. 

இந்த பகுதியில் இந்திய ராணுவத்தினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு 14 அடி நீளத்துக்கு சுரங்கபாதை செல்வதை கண்டுபிடித்தனர். பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்த சுரங்கப்பாதை தோண்டப்படுள்ளது. இதுகுறித்து ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். 

அங்கு விரைந்து வந்த ராணுவ உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு சிலர் சுரங்கப்பாதை தோண்டுவதை அறிந்து துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். தீவிரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் சுரங்கம் அமைத்துக் கொடுத்துள்ளது என ராணுவ அதிகாரிகள் குற்றம் சாட்டினர். 

மேலும், அங்கிருந்து அமெரிக்க தயாரிப்பான திசைகாட்டும் கருவி, இரண்டு மேகசின்கள், 60 சுற்றுகள் சுடும் வகையிலான குண்டுகள், கையெறி குண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. சிலர் தங்கியிருந்து சுரங்கம் தோண்டுவதற்கான கருவிகளும், ஆட்கள் தங்கியதற்கு ஆதாரமான பொருட்களும் சிக்கின. இதுகுறித்து ராணுவ அதிகாரி ராம் அவ்தார் கூறுகையில், அர்னியா பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சிலரது நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினோம். அப்போது நடத்திய சோதனையில் சுரங்கம் தோண்டப்பட்டதை கண்டறிந்தோம். இதனால் மிகப் பெரிய ஊடுருவல் தடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.