Header Ads

இந்த சாதனம் புலிகளிடம் இருந்திருந்தால் கதையே வேறு: இறுதி யுத்தம் நடந்தே இருக்காது எனலாம்



பிரித்தானிய தயாரிப்புகளில் ஒன்றான, "ஸ்சாப்பர்" என்று அழைக்கப்படும் இச் சாதனம் விடுதலைப் புலிகள் கைகளில் இருந்திருந்தால். இறுதி யுத்தம் என்று ஒன்று நடந்திருக்காது எனலாம். முகமாலையில் யுத்தம் தொடங்கிய நாள் முதலே "பீச் கிராப்ட்" எனப்படும் ஒரு ஆளில்லா விமானம். மேலும் ஸ்ரேல் தயாரிப்பான 3 ஆளில்லா விமானங்களை வன்னி நிலப்பரப்பில் 24 மணி நேரமும் பறக்கவிட்டது இலங்கை அரசு. பலாளி கட்டுப்பாட்டு தளத்தில் இருந்து இயக்கப்பட்ட இந்த ஆளில்லா விமானங்கள் கொடுத்த வீடியோ தகவலே புலிகளின் நடமாட்டத்தை சிங்கள ராணுவத்திற்கு கொடுத்து. புலிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட காரணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

சு.ப தமிழ்ச் செல்வன் அவர்களின் நடமாட்டம் தொடக்கம், மூத்த தளபதிகள் நடமாட்டம் ஏன் தலைவர் எங்கே செல்கிறார் என்று கண்டு பிடிக்க கூட இந்த ஆளில்லா விமானத்தை தான் இலங்கை அரசு பயன்படுத்தி இருந்தது. பிரித்தானியா பல வருடங்களுக்கு, முன்னரே இந்த "ஸ்சப்பர்" என்னும் ஊடுருவும் கருவிகை கண்டு பிடித்து அதனை இயக்கி வருகிறது. இது பல மைல்களுக்கு அப்பால் பறக்கும் ஆளில்லா விமானத்தை முதலில் கண்டறிந்து. அதனை இயக்க என்ன அலைவரிசை பாவிக்கப்படுகிறது என்பதனையும் கண்டறிந்து. அதே அலைவரிசைகளை தானும் உருவாக்கி உடனே அனுப்ப வல்லது.

இதனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதும். இல்லையென்றால் அருகில் உள்ள மரம் அல்லது கட்டிடத்தோடு மோதி செயல் இழந்து போகும். அத்தோடு விமானம் கொடுத்துக் கொண்டு இருக்கும் வீடியோ அலை வரிசையும் நின்றுவிடும். இதனால் எதிரியால் விமானத்தை இயக்க முடியாத நிலை தோன்றும். குறித்த சாதனத்தை ஈராக்கில் தற்போது அமெரிக்க படையினர் பாவித்து வருகிறார்கள். இதனூடாக ஐ.எஸ் -ஐ.எஸ் அமைப்பின் சுமார் 500 சிறிய ரக ஆளில்லா விமானங்களை அவர்கள் வீழ்த்தியுள்ளார்கள் என்று , அமெரிக்க கூட்டுப் படை அதிகாரி ஒருவர் நேற்றைய தினம்(சனிக்கிழமை) தெரிவித்துள்ளார்.

இது விடுதலைப் புலிகள் கைகளில் இருந்திருந்தால், இன்று நாம் இப்படி எல்லாம் பேசி இருக்க தேவையில்லை என்று கூறலாம் வெறுமனவே இந்த சாதம் ஒரு வெற்றியை பெற்று தந்திருக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் சிங்களத்தின் தாக்குதல் வெகுவாக குறைந்திருக்கும். அவர்களால் நகர முடியாத நிலை தோன்றியிருக்கும் என்று கூறலாம்.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.