Header Ads

முதல் மனைவியின் மகனால், தந்தைக்கு நடந்த விபரீதம்.!

அநுராதபுரம்-மதவாச்சி பகுதியில் தந்தை மீது கொண்ட சந்தேகத்தினால் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகனை  பொலிஸார் கைது நேற்று  செய்துள்ளனர்.
ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரியான தாக்குதலுக்கு உள்ளான நபர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஓய்வு பெற்ற குறித்த பொலிஸ் அதிகாரி முதல் மனைவி இறந்ததும் இரண்டாந் தாரமாக ஆசிரியை ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் ஆசிரியையை திருமணம் செய்து கொள்வதற்காகவே தனது தாயை தந்தை கொலை செய்து விட்டதாக சந்தேகம் கொண்டே  முதல் மனைவியின் 22 வயதுடைய மகன் தனது தந்தையை தாக்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.