Header Ads

அமெரிக்க உளவு விமானம் தீப்பற்றியபடி வானில் இருந்து கீழே விழுந்தது! தாக்கியது யார் ?

ஏமன் நாட்டை உளவு பார்ப்பதற்காக அமெரிக்கா அனுப்பி இருந்த ஆளில்லா விமானத்தை சனா நகரில் ஹவுத்தி போராளிகள் சுட்டு வீழ்த்தினர். ஏமன்: அமெரிக்க உளவு விமானத்தை ஹவுத்தி போராளிகள் சுட்டு வீழ்த்தினர் சனா: ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த மூன்றாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த ஆதரவுடன் நாட்டின் தலைநகரான சனா பகுதியை கைப்பற்றியுள்ள புரட்சிப் படையினர் அந்நகரை தங்களது ஆளுமைக்கு உட்படுத்தி வைத்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சனா நகரில் காலரா எனப்படும் வாந்திபேதி நோய் படுவேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து, ஆட்சி நிர்வாகத்துக்கு பொறுப்பேற்றுள்ள ஹவுத்தி அரசின் நிர்வாகம் கடந்த மாதம் சனா நகரில் அவசர நிலை சட்டத்தை பிரகடனப்படுத்தியது.  

சனாவை கடந்து அருகாமையிலுள்ள அமானத் அல்-செமா மாகாணம், ஹோடெய்டா, டய்ஸ் மற்றும் ஏடென் நகரிலும் காலரா நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதம் 27-ம் மாதம் வரை சுமார் ஆயிரம் பேர் காலராவுக்கு பலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சுமார் 7.5 லட்சம் மக்கள் காலரா நோயால் பாதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் போதிய ஊட்டச்சத்தான உணவு கிடைக்காமல் திண்டாடி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் சனா நகரின் மீது இன்று பறந்த அமெரிக்க உளவு விமானத்தை ஹவுத்தி போராளிகள் சுட்டு வீழ்த்தினர். US MQ-9 ரகத்தை சேர்ந்த இந்த ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட காட்சிகள் வெளிநாட்டு ஊடகங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.