Header Ads

திருட்டு விசிடியை ஆதரிக்கும் பா.ஜ.க அரசு.! விஷால் கடும் கண்டனம்.


சென்னை : இணையத்தில் மெர்சல் படத்தை பார்த்ததாக கூறிய எச். ராஜாவுக்கு, விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது செயலுக்கு எச். ராஜா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விஷால் வலியுறுத்தியுள்ளார். திருட்டுத்தனமாக படத்தை பார்த்ததாக கட்சி பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் கூறியது வேதனை அளிக்கிறது. மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி திருட்டு வீடியோவை ஆதரிக்கிறீர்கள் என்றும் திருட்டு விசிடி குற்றத்தை அரசுகள் சட்டபூர்வமாக ஆகிவிட்டதாக என்றும் எச். ராஜாவுக்கு விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.

மெர்சல் படம் குறித்து ரசிகர்களை விட, பாஜக.,வினர் அதிகமாக விமர்சித்து வருகின்றனர். இந்த வகையில் எச்.ராஜா இடைவெளியின்றி மெர்சல் குறித்து விமர்சித்து வருகின்றார். பாஜக அரசின் திட்டங்களான டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி, பணம் மதிப்பிழப்பு உள்ளிட்டவற்றை பற்றி மெர்சல் படத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த பாஜகவினர், அந்த படத்திற்கு எதிராகவும், விஜய்க்கு எதிராகவும் போர் கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் இந்த படம் குறித்து கடுமையாக விமர்சித்து வரும் பாஜகவின் எச்.ராஜா, இப்படத்தை தியேட்டரில் பார்க்காமல் இணையதளத்தில் தான் பார்த்ததாக ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.