Header Ads

வடகொரியாவின் தாக்குதல் வட்டத்தில், அமெரிக்க மாகாணம்: வெளியான பகீர் தகவல்..!

தற்போதைய சூழலில் அமெரிக்காவின் எந்த மாகாணத்தையும் குறிவைத்து தாக்கும் சக்தி வடகொரியாவிடம் இருப்பதாக அமெரிக்க தளபதி ஒருவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள NASIC எனப்படும் புலனாய்வு மையத்தின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான Colonel Sean Larkin தென் கொரியாவின் சியோல் நகரில் கருத்தரங்கு ஒன்றில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய புலனாய்வு மையமானது கடந்த பல மாதங்களாக வடகொரியாவின் ஏவுகணை திட்டங்களை உன்னிப்பாக கவனித்து வந்ததாகவும், குறித்த திட்டங்களில் ஈடுபட்டிருக்கும் வல்லுநர்கள், வெளியாகும் புகைப்படங்கள், உளவுத்துறை ஆய்வாளர்கள் வெளியிடும் அறிக்கைகள் என அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பின்னரே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் அமெரிக்காவின் எந்த ஒரு மாகாணத்தையும் தாக்கும் வல்லமை வடகொரியாவிடம் உள்ளதாகவும், அது இந்த கோடை காலத்தில் வடகொரியா மேற்கொண்ட ஏவுகணை சோதனையில் இருந்தே வல்லரசு நாடுகளுக்கு புரிந்திருக்கும் எனவும் Colonel Sean Larkin தெரிவித்துள்ளார்.
முக்கியமாக அமெரிக்காவில் உள்ள 48 மாகாணங்கள் வடகொரியாவின் தாக்குதல் வட்டத்தில் உள்ளதாகவும் அவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
மிக துல்லியமாக, கடந்த யூலை மாதம் வடகொரியா மேற்கொண்ட ஏவுகணை சோதனையானது கலிபோர்னியா மாகாணத்தை துவம்சம் செய்ய போதுமானது என Colonel Sean Larkin தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியானது வடகொரிய தலைவரின் விரல் தொடும் தூரத்தில் தான் இருப்பதாகவும், இதனாலையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா விவகாரத்தில் பொறுமை காக்க வேண்டும் என துறை சார்ந்த பலரும் ஆலோசனை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


1 comment:

  1. Too great, i love too much Mr. Kim, WE DONT NEED NO MORE USA ATG WORLD MAP.

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.