Header Ads

வாகனம் செலுத்துபவர்களிட்கு இப்பொழுதுதான் உயிர் வந்தது? காரணம் என்ன தெரியுமா?

அன்றாட விலை நிர்ணயம், வீடு தேடி பெட்ரோல் விநியோகம் ஆகியவற்றை எதிர்த்து வரும் 13-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற இருந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். 13-ம் தேதி நடக்கவிருந்த பெட்ரோல் பங்க் வேலை நிறுத்தம் வாபஸ் புதுடெல்லி: வீடுகளுக்கு பெட்ரோல், டீசலை கொண்டு சென்று நேரடியாக விநியோகம் செய்வது மற்றும் பெட்ரோல், டீசல் விலைகளை தினமும் நிர்ணயிக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 13-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர். 

இந்தியா முழுவதும் 54,000 பெட்ரோல் விற்பனையாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும், தங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் வரும் 27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், வரும் 13-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற இருந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த வாபஸ்-க்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.