Header Ads

லண்டன் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன? காரணமான 02 பேரின் புகைப்படங்கள் வெளியீடு..

லண்டன் இரயில் நிலையத்தில் சண்டை ஏற்பட்டதன் காரணமாக அப்படி ஒரு பீதி நிலவியுள்ளதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள Oxford Circus இரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதாக கூறி பீதியடைந்ததால், பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
அதன் பின் பொலிசார் வந்து குறித்த பகுதிகள் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்ட போது, அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்று தெரிவித்திருந்தனர்.

இதைக் கண்ட மக்கள் தங்களுக்கு எதுவும் பிரச்சனை வந்துவிடுவோமோ அல்லது நமக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்தின் காரணாமாகவே ஓடியிருக்கலாம், இருப்பினும் அந்த நபர்கள் குறித்த முழுமையான தகவல் தெரியவில்லை இதில் தொடர்புடைய இரண்டு பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அவர்கள் இரண்டு பேரையும் அழைத்து விசாரித்தால், இதற்கான முழுமையாக காரணம் தெரியவரும் என வரும் பொலிசார் கூறியுள்ளனர்.
மேலும் அங்கிருந்த மக்கள் பலரும் குறித்த சம்பவத்திற்கு காரணம் சிலர் காட்டுமிராண்டித்தனமாக சண்டை போட்டது தான் என்று பொலிசாரிடம் கூறியுள்ளனர்.
இந்த பீதியின் காரணமாக நெரிசலில் 20 பேர் சிக்கியதாகவும், அதில் 9 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டதில், 7 பேர் வீடுதிரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.