Header Ads

தவறுதலாக வங்கிக்கணக்கில் வந்த £14 மில்லியன் பணம்: பெண் செய்த புத்திசாலித்தனமான செயல்..

பெண் ஒருவர் வங்கிக்கணக்கில் தவறுதலாக தனியார் வங்கி £14 மில்லியன் பணம் டெபாசிட் செய்த நிலையில் அது குறித்து அப்பெண் உடனடியாக வங்கிக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. Clare Wainwright (26) என்ற பெண்ணுக்கு கடந்த செப்டம்பர் மாதம் தேசிய அவுஸ்திரேலிய வங்கியிலிருந்து கடிதம் ஒன்று வந்துள்ளது.
அதில், வீட்டுக் கடனுக்கு அடமானம் திருப்பிச் செலுத்தும் தொகை $25,102,107 (£14 மில்லியன்) வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என கூறப்பட்டிருந்தது.
$2,500 என்பதற்கு பதிலாக மில்லியன் கணக்கான தொகை தவறுதலாக கூறப்பட்டிருந்தது. அதன்படி £14 மில்லியன் Clare வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது.

இதையடுத்து தனது வங்கி கணக்கை சரி பார்த்த Clare இவ்வளவு பெரிய தொகை தன் கணக்கில் உள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
Clare வழக்கறிஞர் என்பதால் வங்கிக்கு சொந்தமான பணத்தை உபயோகப்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து அறிந்திருந்தார்.
அதன் காரணமாக உடனடியாக இதுகுறித்து குறித்த வங்கிக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தற்போது இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ள நிலையில், தான் வழக்கறிஞர் என்பதால் தான் பணத்தை செலவு செய்யவில்லை என Clare கூறியுள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.