Header Ads

கோரவிபத்து..! ஒருவர் பலி , 19 பேர் படுகாயம்..!

வெலிகந்த - நாமல்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது மிதி வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து வெலிகந்த நோக்கி பயணித்து கொண்டிருந்த சிற்றூந்து ஒன்று மிதி வண்டி ஒன்றினை முன்னோக்கி செல்ல முற்பட்டுள்ள வேளையில் எதிர் திசையில் பேருந்து பயணித்த வேளையில், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், சிற்றூந்து மிதி வண்டியுடன் மோதுண்டதில் மிதி வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பேருந்தில் பயணித்தவர்கள் இதன்போது காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சிற்றூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.