Header Ads

ரோஹிங்யா அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி

மியான்மர் நாட்டில் இருந்து ரோஹிங்யா அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மியான்மர் நாட்டில் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள ரக்கைன் மாவட்டத்தில் இருந்து ஒரு மீன்பிடிப் படகில் ரோஹிங்யா இஸ்லாமியர் தப்பி வந்துள்ளனர்.

படகு வங்கதேச கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.37 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் 11 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அளவுக்கு அதிகமான பயணிகள் ஏற்றப்பட்டதாலும், கனமழையால் ஏற்பட்ட கடல் சீற்றத்தாலும் விபத்து நிகழ்ந்திருக்கக் கூடும் என வங்கதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.