Header Ads

ஏமன்: கார் வெடிகுண்டு தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பலி - ஐ.எஸ். பொறுப்பேற்பு..

வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் தென்பகுதியில் பிரபல துறைமுக நகரமான ஏடென் என்ற நகரம் உள்ளது. இந்நகரில் வடகிழக்கில் உள்ள கோர் மக்ஸார் மாவட்ட வருவாய்த்துறை அலுவலகத்தை குறிவைத்து தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள் உட்பட பலர்  காயமடைந்ததாகவும் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வருவாய்த்துறை அலுவலகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஏமனை மையமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.