Header Ads

பத்மாவதி படத்திற்கு, 5 மாநிலங்கள் தடை விதிப்பு.. ஒரு முதல் - மந்திரி மட்டும் வரவேற்பு.. அவர் யார் தெரியுமா..?

பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம், ‘பத்மாவதி’. ‘வியாகாம் 18’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மத்திய பிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த படத்துக்கு தடையும் விதித்து உள்ளன. இந்த படத்துக்கு தணிக்கைக்குழு இன்னும் சான்றிதழ் வழங்காததால் வருகிற 1–ந்தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்த தயாரிப்பு நிறுவனம், தற்போது வெளியீட்டு தேதியை தள்ளிவைத்து உள்ளது. 

 பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, நடிகை தீபிகா படுகோனேவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது.  ஆனால் இந்த திரைப்படத்துக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, பத்மாவதி படக்குழுவினர் தங்கள் மாநிலத்துக்கு வந்தால் வரவேற்போம் என கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் தனியார் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, பத்மாவதி திரைப்படத்தை வேறு எந்த மாநிலத்திலும் அவர்களால் (பன்சாலி மற்றும் தயாரிப்பாளர்) வெளியிட முடியவில்லை என்றால், எங்கள் மாநிலத்தில் அதை வெளியிடுவதற்கான சிறப்பு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம். அதை நாங்கள் பார்த்துக்கொள்வோம். இதனால் மேற்கு வங்காளம் மகிழ்ச்சியும், பெருமையும் அடையும். பன்சாலி மற்றும் அவரது பத்மாவதி படக்குழுவினரை எங்கள் மாநிலத்தில் வரவேற்போம் என கூறிஉள்ளார். பல்வேறு மாநிலங்கள் தடை விதித்து உள்ள நிலையில் மேற்கு வங்காளம் வரவேற்கிறதா? என்ற கேள்விக்கு மம்தா பானர்ஜி பதிலளித்து உள்ளார்.

மம்தா பானர்ஜி டுவிட்டரில் ஏற்கனவே வெளியிட்ட செய்தியில், பத்மாவதி சர்ச்சைகள் வெறும் துரதிஷ்டவசம் மட்டும் கிடையாது, கருத்து சுதந்திரத்தை அழிக்க ஒரு அரசியல் கட்சியின் கணக்கிடப்பட்ட திட்டம். இந்த சூப்பர் நெருக்கடிநிலைக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். சினிமா துறையில் இருக்கும் அனைவரும் ஒன்றாக வேண்டும், ஒரே குரலில் போராட வேண்டும் என கூறியிருந்தார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.