Header Ads

60 தமிழர்களுக்கு சித்திரவதை? இராணுவத்திற்கு எதிராக புதிய விசாரணை..!

ஸ்ரீலங்கா இராணுவம் தொடர்பில் புதிய விசாரணையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
60 தமிழர்களுக்கு சித்திரவதை? இராணுவத்திற்கு எதிராக புதிய விசாரணை!
ஐக்கிய நாடுகளின் அதிகாரி யஸ்மின் சூகா முன்வைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் செய்த் அல் ஹுசைன் இந்த விசாரணையை ஆரம்பித்துள்ளார்.
முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சிலரின் வாக்கு மூலங்களின் பிரகாரம் 60 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக யஸ்மின் ஐக்கிய நாடுகள் சபையில்  முறைப்பாடு செய்துள்ளார்.
தற்போதைய தேசிய அரசாங்கத்தின் கீழ் இந்த சித்திரவதை இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில்  இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்ட வரப்பட்டு 8 வருடங்கள் கடந்த பின்னர் முன்வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டை ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க முற்றாக மறுத்துள்ளார்.
இதேவேளை, யஸ்மின் சூகாவின் முறைப்பாட்டில் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட  60 தமிழர்களும் யார் என்பது குறிப்பிடப்படாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.