Header Ads

‛டீ' விற்றேன் ஆனால் நாட்டை விற்றதில்லை : பிரதமர் மோடி பேச்சு..

சூரத்: டீ விற்றேன் நாட்டை விற்றதில்லை என மோடி கூறினார்.
குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14ம் தேதி ஆகிய தினங்களில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பிரதமர் மோடி தீவிர பிரசாரங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆமதாபாத், ராஜ்கோட் ஆகிய இடங்களில் தனது பிரசாரத்தை முடித்துவிட்டு சூரத்தில் நடந்த பிரசாரத்தில் கலந்து கொண்டார்.

நாட்டை விற்கவில்லை


அவர் பேசியதாவது:குஜராத்தில் 22 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் இருந்த விஷயங்கள் முற்றிலும் மாறுபட்டவை. தற்போதைய நிலையில் இங்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கட்டுக்கோப்பான சமூகம் இனி பிரியாது. நான் டீ விற்றுள்ளேன், நாட்டை விற்றதில்லை. இந்திரா அமைச்சரவையில் இருந்த மொராஜியை ஒரே இரவில் அவர் நீக்கிவிட்டார். காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு வங்கியின் கதவுகளை திறக்கவில்லை. நாங்கள் ஏழைகளுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தபோது நாங்கள் செய்த முதல் காரியம் ஜன தன் யோஜனாவை துவங்குவதே முக்கியமாக என தோன்றியது. மேலும் நிதியை திரட்டுவதில் கவனம் செலுத்துவதுதான் இவ்வாறு மோடி பேசினார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.