Header Ads

இத்தாலியில், இந்திய மாணவர்கள் மீது இனவெறி தாக்குதல் என மாணவர்கள் குற்றச்சாட்டு..!

இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியத்தில் உள்ள மிலன் நகரில் இந்திய மாணவர்கள் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இத்தாலியில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல், இனவெறி தாக்குதல் என மாணவர்கள் குற்றச்சாட்டு


 ‘‘மிலன் நகரில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வருந்தத்தக்க செய்தி கிடைத்து உள்ளது. இந்திய மாணவர்கள் அனைவரும் பதற்றம் அடையாமல் இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக மிலன் நகரில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு சார்ந்த உயர்மட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது’’ என குறிப்பிடப்பட்டு உள்ளது இந்திய தூதரகம்.

மிலன் நகரில் இதுபோன்ற தாக்குதல் நடக்கும் இடங்கள் குறித்து இந்திய மாணவர்கள் சக மாணவர்களுக்கு தெரியப்படுத்தி, அந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்திய மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்கள் கிடைத்து உள்ளன. தனிப்பட்ட முறையில் இதனை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். இந்திய மாணவர்கள் யாரும் கவலை அடைய தேவை இல்லை’’ என தெரிவித்து உள்ளார். 

இத்தாலியில் இந்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இனவெறியிலானது என மாணவர்கள் குற்றம் சாட்டிஉள்ளனர். 

மிலனில் டிவி சேனலுக்கு பேட்டியளித்து பேசிய இந்திய மாணவர்கள் மூவர், நாங்கள் இனவெறி தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் என கூறிஉள்ளனர். 
 
ஒரு மாணவர் பேசுகையில் சில இத்தாலியர்கள் தன்னை முகத்தில் தாக்கியதாகவும், இந்தியாவிற்கு திரும்புமாறு எச்சரித்ததாகவும் குறிப்பிட்டார். கடந்த 17-ம் தேதி இச்சம்பவம் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். மற்றொரு மாணவர் பேசுகையில் தன்னை உடைந்த மதுபான பாட்டிலை கொண்டு மிரட்டினார்கள், அக்டோபர் 29-ம் தேதி என்னை தாக்கினார்கள் என கூறிஉள்ளார். 

இத்தாலி பிரதமர் பாலோ ஜென்ட்டிலோனி 29, 30-ம் தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இத்தாலியில் சுமார் 180000 இந்தியர்கள் வசித்து வருகிறார்கள், ஐரோப்பாவில் இங்கிலாந்து, நெதர்லாந்தை அடுத்து இந்தியர்கள் அதிகமாக வாழும் நாடாக இத்தாலி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.