Header Ads

சீமான் தலைமையில் நடைபெற்ற, மாவீரர் நாள் பொதுக்கூட்டம்..

நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 27-11-2017 (திங்கட்கிழமை) அன்று மாலை 5 மணியளவில் கிருஷ்ணகிரி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தேவராஜ் மகால் திடலில் (அரசுக் கலைக் கல்லூரி எதிரில்) மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்புத்தென்னரசன், கலைக்கோட்டுதயம், இராவணன், கதிர்.இராஜேந்திரன், நல்லதுரை, ஹுமாயுன் மற்றும் களஞ்சியம்.சிவக்குமார், கொள்கைப்பரப்பு செயலாளர் ஜெயசீலன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் கல்யாண சுந்தரம், ஜெகதீசப் பாண்டியன், அறிவுச்செல்வன், துரைமுருகன் மற்றும் அகழ்வான், ஆன்றோர் அவைப் புலவர் மறத்தமிழ்வேந்தன், மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி, வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், அருண் ரங்கராசன், செய்திப்பிரிவு செயலாளர்கள் பாக்கியராசன் மற்றும் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்பப் பிரிவு வள்ளல், சோழிங்கநல்லூர் இராஜன், காஞ்சி சஞ்சீவிநாதன், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக், கிருஷ்ணன் மற்றும் சாரதி உள்ளிட்ட மாநில, மண்டலப் பொறுப்பாளர்கள், கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று மாவீரர்களுக்கு சுடரேந்தி வீரவணக்கம் செலுத்தினர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.