Header Ads

பரிஸ் - நடுவீதியில் பற்றி எரிந்த பேரூந்து! - சிதறி ஓடிய பயணிகள்


பயணிகள் பேரூந்து ஒன்று, இன்று பரிசில் நடுவீதியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. பயணிகள் இறங்கி சிறதி ஓடியதால் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. 

பரிஸ் 7 ஆம் வட்டாரத்தின் rue du Bac வீதியில் சென்றுகொண்டிருந்த RATP பயணிகள் பேரூந்து ஒன்றே இவ்வாறு திடீரென தீப்பிடித்துள்ளது. பேரூந்தின் பின் புறத்தில் தீ பற்ற ஆரம்பித்ததுமே, பயணிகள் பேரூந்தில் இருந்து இறங்கி வெளியேறினர். அனைவரும் வெளியேறியதன் பின்னர் பேரூந்தின் உள் இருக்கைகள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் சம்பவ இடத்தில் தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. சம்பவத்தில் ஒருவரும் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

பின்னர், தீ அணைக்கப்பட்டு, வீதியில் இருந்து பேரூந்து அகற்றப்பட்டதும், போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.